இந்துஸ்தான் கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கல்லூரிகளில் பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ மற்றும் எம்.பி.ஏ மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பொறியியல் கல்வியின் சிறப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், கல்லூரியில் பயிலும் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்துஸ்தான் கல்வி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன் தலைமை ஏற்று வரவேற்றார். இந்த 4 வருட பாடத்திட்டத்தை தொழில்நுட்ப திறன்களுடன் கூடிய ஒழுக்கத்துடன் மேற்கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயா, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் நடராஜன், டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் மாணவர்களிடையே படிப்பின் போது பின்பற்ற வேண்டிய பயனுள்ள நெறிமுறைகள் மற்றும் பல்வேறு பொறியியல் துறைகளில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கமளித்தனர்

நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.