இந்துஸ்தான் கல்லூரியில் ஐ.பி.எம் மென்பொருள் ஆய்வகம் திறப்பு

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஐபிஎம் மென்பொருள் ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஆய்வகம் கோவை மாவட்டத்தின் முதல் ஐபிஎம் மென்பொருள் ஆய்வகம் ஆகும்

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக ELCOT நிர்வாக இயக்குனர் அருண் ராஜ் IAS, கெளரவ விருந்தினராக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, இணை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் DS & AI-க்கான தொழில்நுட்ப ஆலோசகர், ஐபிஎம் இந்தியா பிரைவேட் லிமிடெட் (மும்பை) ஹிரிஷிகேஷ் பதக் கொண்டு இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

இந்த ஐபிஎம் மென்பொருள் கூடமானது மானவர்களின் திறன் மற்றும் செயல் முறையை மேம்படுத்தும் வகையில் துறை சார்த்த பல்வேறு தொழில் நுட்ப பயிற்சிகளை கொண்டுள்ளது, பின்வரும் நாட்களில் மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கல்லூரி முதல்வர் ஜெயா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன், டீன் மகுடீஸ்வரன், கணினி அறிவியல் பொறியியல் துறை தலைவர் சங்கர், பேராசிரியர்கள் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.