அன்பானவர்களுக்கு ஆரோக்கியத்தை பரிசளியுங்கள்!

– ஏ.ஜி’ஸ் ஹெல்த் கேர் அறிமுகப்படுத்தும் பரிசு கூப்பன்

பண்டிகை காலம் துவங்கப் போகிறது. அன்பிற்குரியவர்களுக்கு பண்டிகை கால பரிசாக அவர்களுக்கு பிடித்ததை பரிசளிக்க விரும்புவோம். ஆனால் அவர்களுக்கு நீங்கள் ஆரோக்கியத்தை பரிசளித்தது உண்டா? அப்படி ஒரு பரிசை கோவை சாய்பாபா காலணியில் அமைந்துள்ள ஏ.ஜி’ஸ் மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையம் அறிமுகம் செய்துள்ளது.

அது என்னவென்றால், முழு உடல் பரிசோதனைக்காக ‘தி கிஃப்ட் ஆப் பெஸ்ட் ஹெல்த்’ என்ற சிறப்பு பரிசு கூப்பன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த திட்டத்தை ஒருவர் பரிசாக தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு ஒரு போன் கால் அல்லது வாட்ஸஅப் மூலம் வழங்கிட முடியும்.

இந்த திட்டத்தை ஏ.ஜி’ஸ் மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையத்தின் இயக்குனர் மருத்துவர் ஆதித்யன் குகன் மற்றும் தி தோல் கிளினிக் இயக்குனர் மருத்துவர் ஜனனி ஆதித்யன் அறிமுகம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவர் ஆதித்யன் குகன் கூறுகையில்: பண்டிகை காலங்களில் நம் அன்பை பிடித்தவர்களிடம் பரிசுப் பொருள்கள் வாயிலாக உணர்த்துவோம். ஆனால் நாம் எந்த பரிசு பொருளை கொடுத்தாலும் அதை அனுபவிப்பதற்கு நமது உடல் நலம் நன்றாக இருக்கவேண்டும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியத்தையே பரிசாக அளிக்கலாம் என்ற கருத்தில் ‘தி கிஃப்ட் ஆப் பெஸ்ட் ஹெல்த்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.

உலகத்தில் நீங்கள் எங்கு இருந்தாலும், தொலைபேசி வாயிலாக எங்கள் மையத்தை தொடர்பு கொண்டு (9566755517, 9659455556, 9944333006) மாஸ்டர் ஹெல்த் செக் அப் பேக்கஜை பதிவு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி கூப்பனை பெறலாம்.

மேலை நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் உள்ளது. இந்திய அளவில் மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே இந்த திட்டம் உள்ளது. தமிழக அளவில் முதன்முதலில் ஏ.ஜி’ஸ் மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையம் இதனை அறிமுகம் செய்துள்ளது.

இதை நாங்கள் அறிமுகப்படுத்தக் காரணம் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பல உடல் நல பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதனை பலரும் கண்காணிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். பின்பு மிகவும் சிக்கலான நிலையில் மருத்துவர்களிடம் வருகின்றனர். இதனை தடுக்கும் ஒரு முயற்சியாக உடல்நல ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில், முழு உடல் பரிசோதனைக்கான சிறப்பு பரிசு கூப்பனை உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசாக வழங்கும் வகையில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதுபோன்ற பரிசை அளிக்கும்போது பரிசோதனை செய்துக் கொள்ளலாமே என்ற ஒரு பொறுப்புணர்வு ஒருவருக்கு ஏற்படும். இதனால் பல நோய்களின் ஆரம்ப நிலைகளை கண்டறிய முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இதில் மஞ்சள், பச்சை, வெள்ளை என மூன்று நிறத்தில் வயதுக்கு ஏற்ப கூப்பன் உள்ளது. இதில் 50 % சலுகை விலையில், ரூ.7000 மதிப்புள்ள முழு உடல் பரிசோதனை ரூ.3500 க்கும், ரூ.11,000 மதிப்புள்ள பரிசோதனை ரூ.5,500 க்கும், ரூ.15000 மதிப்புள்ள பரிசோதனை ரூ. 7500 க்கும் செய்யப்படுகிறது.

இந்த சலுகை செப்டம்பர் 24 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இப்பரிசோதனையில் இசிஜி, எக்கோ, எக்ஸ் ரே, தைராய்டு பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதனுடன் தோல், மகப்பேறு, சிறுநீரகவியல் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோருக்கும் இலவசமாக ஆலோசனை அளிக்கப்படுகிறது.

இதுபோக இன்னும் பிற கூடுதல் பரிசோதனைகள் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு 25% சலுகையும் அளிக்கப்படுகிறது. லாபம் நோக்கம் இல்லாமல் உடல் நலம் குறித்த அக்கறையும், முழு உடல் பரிசோதனை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் என்பதையும் அவர் பதிவிட்டார்.