ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு ஹார்ட் வாரியர்ஸ் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 200 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா ஹார்ட் வாரியர்ஸ் பயிற்சி’ அளிக்கப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைப் பிரிவு சார்பில், “ஸ்ரீ ராமகிருஷ்ணா ஹார்ட் வாரியர்ஸ்” என்ற தலைப்பில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி முகாம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருமதி வேலுமணியம்மாள் நினைவு அரங்கில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ராம்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் டாக்டர் சுகுமாரன், இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தலா 20 பேர் வீதம் 200 பேர் பயிற்சி பெற்றனர்.

பயிற்சி பெற்ற மாணவர்கள் மூலம் உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு, மாரடைப்பு, இதயநோய் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் செய்திருந்தார்.