பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை – போத்தனூர் இடையே ரயில் சேவை மாற்றம்

கோவை – போத்தனூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 37 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சொர்ணூரில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, காலை 11.05 மணிக்கு கோவை வரும் ரயில் (எண்:06458), வரும் 12-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், கோவையில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் தினசரி ரயில் (எண்:06459), கோவைக்கு பதில் போத்தனூரில் இருந்து வரும் 12-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை மாலை 4.41 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மாற்று வழித்தடத்தில் பிலாஸ்பூரில் இருந்து வரும் 12, 19, 26-ந் தேதி மற்றும் அக்டோபர் 3,10,17 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22815), கோவைக்கு பதில் இருகூர் – போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.

நெல்லையில் இருந்து வரும் 14, 21, 28,-ந் தேதி மற்றும் அக்டோபர் 5,12 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக தாதர் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22630), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.

பிலாஸ்பூரில் இருந்து வரும் 13, 20, 27 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, கோவை வழியாக நெல்லை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22619), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும்.

பாட்னாவில் இருந்து வரும் 13, 20, 27 ஆம் தேதி அக்டோபர் 4,11,18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22670), கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.

செகந்திராபாத்தில் இருந்து வரும் 16, 23, 30-ந் தேதி மற்றும் அக்டோபர் 7, 14 ஆகிய தேதிகளில் புறப்பட்டு கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:07189), கோவைக்கு பதில் இருகூர் – போத்தனூர் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.

கோவை வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படாததால், போத்தனூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.