சிம்மாசனத்தில் 70 ஆண்டுகள்: நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியின் வாழ்க்கை படங்கள்

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2 வது நபர் என்ற பெருமைக்குரிய இங்கிலாந்து ராணி 2 ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று மரணமடைந்தார்.

 

ராணி எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படுவதாகவும், மேலும் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் அவரது உடல் வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த இவர், பிப்ரவரி 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக அரியனை ஏறி 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாக செயல்பட்டுள்ளார். இவர், இங்கிலாந்து பிரதமர் தேர்வுக்கு இராணி இரண்டாம் எலிசபெத் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர் உயிரிழந்ததை தொடர்ந்து மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இரண்டாம் எலிசபெத் உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால் 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி செய்து 14 ஆம் லூயிஸ் மன்னர் உலகின் நீண்ட நாள் ஆட்சி செய்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.