நீட் தேர்வில் ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 464 மாணவர்கள் தேர்ச்சி!

கோவையின் ஆகாஷ் பைஜூஸைச் சேர்ந்த 464 மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வான நீட் யுஜி – 2022 தேர்வில் தேர்ச்சி பெற்று பெற்றுள்ளனர். இதில் மாணவர் ப்ரித்வின் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 270 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதுகுறித்து கூறுகையில்: கருத்துக்களை புரிந்து கொள்ளவும், கற்றுக் கொடுத்து எங்களுக்கு உதவியதற்கும் நாங்கள் ஆகாஷ் பைஜூஸ் நிறுவனத்துக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதேநேரம் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை, நிறுவனத்தின் உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இல்லாமல் நாங்கள் புரிந்து கொண்டிருக்க மாட்டோம் தெரிவித்தனர்.

ஆகாஷ் பைஜூஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி மாணவர்களை வாழ்த்திப் பேசுகையில்:
மாணவர்களின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். மாணவர்களின் இந்த சாதனை அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு அளித்த ஆதரவைக் காட்டுகிறது. மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கல்வி ஆண்டுகளில், நீட் தேர்வில் மாணவர்களை அதிக சதவீத மதிப்பெண் பெற்றவர்களாக மாற்ற ஆகாஷ் பைஜூஸ்
கூடுதல் கவனம் செலுத்தியது. எங்கள் மாணவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் வகையில்
எங்கள் டிஜிட்டல் இருப்பை நாங்கள் தீவிரப்படுத்தினோம்.

ஆய்வுப் பொருட்களையும், கேள்வி வங்கிகளையும் ஆன்லைனில் அணுகும்படி செய்தோம். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்து பல மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தினோம். எங்களது முயற்சிகள் பலனளிப்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களில் இருந்து தெரிகிறது. அவர்களில் பலர் தங்கள் விருப்பப்படி முன்னணி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான நிலையில் உள்ளனர் என்றார்.