இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை

2023 ஆம் ஆண்டில் இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதற்கட்ட ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜனவரி மாதமும், 2ஆம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் மாதமும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு வரும் மே. மாதம் 21 முதல் 31ஆம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது