எஸ்.எஸ்.வி.எம் பள்ளி சார்பில் ‘உருமாறும் இந்தியா மாநாடு’

தனது 25 வது ஆண்டை நினைவு கூறும் விதமாக எஸ்.எஸ்.வி.எம் பள்ளி குழுமம் சார்பாக ‘உருமாறும் இந்தியா மாநாடு’ மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் உறைவிடப் பள்ளியில் நடைபெற்றது. இந்த மாநாடு இன்று தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியாவின் சிறந்த இளம் மனங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இந்தியாவுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

முதல் நாள் மாநாட்டை, தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்திய விண்வெளி பொறியாளர் பத்ம பூஷன் நம்பி நாராயணன் மற்றும் ஹெல்த் பேசிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்வாதி ரோஹித் துவக்கி வைத்தனர்.

வெற்றிக்கான பாதை, சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மாணவர்கள் எவ்வாறு வடிவமைப்பது போன்றவற்றைப் பற்றியும், வாழ்க்கையில் வெற்றிகண்ட பிரபலங்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த மாநாட்டில் பகிர்ந்து கொண்டனர்.

சர்வதேச கல்வி நடைமுறைகள், சிறந்த கற்பித்தல் நுட்பங்கள் ஆகியவற்றுக்காக ‘தி இன்ஸ்பிரேஷன் குரு’ என்ற ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவும் இந்த மாநாட்டில் நடைபெற்றது.