உலக டேபிள் டென்னிஸ் பட்டியல் வெளியீடு

சீனாவில் நடைபெற இருக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி சத்தியன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற சரத் கமல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 9 வரை சீனாவின் செங்டு நகரில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 5 பேர் அடங்கிய இருபால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.சத்தியன் தலைமையிலான ஆடவர் அணியில் சனில் ஷெட்டி, ஹர்மி்த் தேசாய், சேர்த்து வென்றது. மனுஷ்ஷா, மானய்தக்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மனிகா பத்ரா தலைமையிலான மகளிர் அணியில் ஸ்ரீஜா அகுலா, ரீத்ரிஷியா, தியா சிதாலே, ஸ்வஸ்திகா கோஷ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இந்திய அணி செப்டம்பர் 25-ஆம் தேதி சீனா புறப்படுகிறது.

 

 

 

– கோமதிதேவி. பா