காவல் துணை ஆணையாளரை பாராட்டிய லயன்ஸ் இயக்கம்

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் ஃபைரா (FAIRA) இணைந்து, சிறந்த காவல் பணிக்கான ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று அதிகாரிகளில் ஒருவரான சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி அவர்களை, லயன்ஸ் இயக்கத்தின் வட்டாரத்  தலைவரும், கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரும், ஃபைரா தேசிய துணைத் தலைவருமான செந்தில்குமார், பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். அருகில் ஸ்பின் சிட்டி லயன்ஸ் சங்க இன்ஜினியர் ஸ்ரீதர், நேரு நகர் லயன்ஸ் சங்க செயலாளர்(ACT) மோகன்ராஜ், சேலம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அட்மின் அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் உள்ளனர்.