USB மூலம் பரவும் விளைவுகள்

தொழில்நுட்ப துறையில் நாளுக்கு நாள் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றது . USB மற்றும் பென்டிரைவ் போன்ற removable media சாதனங்களால் சைபர் அபாயங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் உலகத்தில் இணையம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் முதல் அதற்கு charge போட பயன்படும் USB கேபிள் வரை  இணையத்தை இயக்க பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .

2022 Honeywell Industrial Cybersecurity USB Threat Report’ என்ற அறிக்கையில்

இந்த ஆண்டில் இது போன்ற removable media சாதனங்களால் 52 சதவீதம் சைபர் அபாயங்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இதே அபாயத்தின் 32% இருந்ததாகவும், தற்போது இது மிகப்பெரிய அளவில் உருவெடுத்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தொழில்துறை சார்ந்து இயங்கும் அமைப்புகளை அதிகமாக தாக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.காரணம் அங்குதான் அதிகமாக இது போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலும் இந்த ஹாக்கர்கள் USB மூலம் பரவும் Malware-களை பயன்படுத்தியே தொழில்நிறுவனங்கள் போன்றவற்றை தாக்குகின்றன என்று அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

தொழில் நுட்ப நிறுவனங்கள் இது போன்ற முறை இல்லாத  பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

-கோமதிதேவி. பா