குழந்தைகளின் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?

உடல் பருமன் என்பது அலட்சியமான விஷயம் அல்ல, அவை கவனிக்கக்கூடியவை. அதுவும் குழந்தைகளுக்கு  ஏற்படும் உடல் பருமன் தீவிரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. தற்போது உள்ள நவீன வாழ்க்கை முறையினாலும், உணவு பழக்கத்தினாலும் குழந்தைகள் உடல் பருமனுடன், வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகின்றனர். இதை கவனிக்காவிட்டால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் மற்றும் இந்த சிக்கலுக்கான தீர்வுகளை நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

குழந்தை பருவ உடல் பருமனால் நீரிழிவு, இதய நோய் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நல அபாயங்கள் உள்ளது.

அந்த அபாயங்கள் என்ன? அதை எவ்வாறு சரிசெய்வது, குழந்தைகளின் உடல் பருமனை குறைப்பதற்கு பெற்றோர்களின் பங்கு என்னவென்று நம் இப்போது காண்போம்.

குழந்தைகளின் உடல் பருமனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்ன?

முதலில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால் கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில்.

இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம். மேலும், அதிக எடை கொண்டவர்களின் இதயம், உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், பக்கவாதத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இவ்வாறு உள்ள குழந்தைகளின் உடல் பருமனை எவ்வாறு குறைக்கலாம்.?

உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது. எடையை குறைக்க நல்ல ஆரோகியமான உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்களை கொடுக்க வேண்டும். குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்களின் உணவில் சேர்க்க வேண்டும்.

மேலும், குழந்தைகளிடம் நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும். இந்த செயல் முறைகளினால் குழந்தைகளின் எடையை குறைக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் உதவுகிறது.