டெல்லியில் முதல்வர்: குடியரசு தலைவருடன் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேச்சு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி சென்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள துணை குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமரை சந்திப்பதாகவும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். இந்த சந்திப்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளேன் தெரிவித்தார்.