கல்வி தொலைகாட்சியின் சி.இ.ஓ நியமனம் நிறுத்தி வைப்பு – முதல்வருக்கு ராமகிருட்டிணன் நன்றி

தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்காக நடத்தும் இலவச தொலைக்காட்சி சேனல் ‘கல்வி’. இந்த தொலைக்காட்சியின் மூலம், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சேனலுக்கு தலைமை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி என்பவரை தமிழக பள்ளிக்கல்வித் துறை நியமித்தது.

இவர் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்று குற்றசாட்டு எழுந்துள்ளதால் திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக ஊடங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மணிகண்ட பூபதி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் ராமகிருட்டிணன், தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் கல்வி தொலைக்காட்சிக்கு CEO ஆக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி சங்பரிவார் தொடர்புடையவர், ரங்கராஜ் பாண்டேவின் நெருங்கிய நண்பர் என்பதை முற்போக்கு அமைப்பினர் சுட்டிக் காட்டியவுடன் அவரின் நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.