அரசு பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் சர்மிளா சந்திரசேகர் பங்கேற்பு

கோவை வடவள்ளி அரசு ஆரம்ப பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் 38 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.