தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ‘சுதந்திர வனம்’

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் 76 வது சுதந்திர விழாவினை முன்னிட்டு அரிய மர வகைகளுடன் கூடிய சுதந்திர வனம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி மாநில மரமான பனை மரத்தின் விதையினை நடவு செய்து சுதந்திர வனத்தினை துவங்கி வைத்தார். இத்துடன் சுற்றுச் சூழல் ஆர்வலர் யோகநாதன் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்கள் நடவு செய்த நாவல் மர சந்ததியிலிருந்து தருவித்த நாவல் மரக்கன்றினை நடவு செய்தார்.

இவ்விழாவினை சிறப்பிக்கும் விதமாக பறவைகள் மற்றும் தேனீகளை ஈர்க்கும் 76 அரிய வகையான மரங்களை பல்கலைக்கழக முதன்மையர்கள், இயக்குநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் நடவு செய்தனர்.

மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் 20 வகையான ரோஜாக்களைக் கொண்ட ரோஜா தோட்டத்தினை துவங்கி வைத்தார்.