தானிஷ் அஹமது கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

கோவை க.கா.சாவடியில் உள்ள தானிஷ் அஹமது தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 76 வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அக்பர் பாஷா தேசிய கொடியினை ஏற்றி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்களிடம் சுதந்திர தின பேருரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பார்த்திபன் சுதந்திர தின உறுதிமொழி ஏற்புரை ஆற்றினார். சுதந்திர தின விழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவ, மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, முக ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, கைப்பந்து, பால் பேட்மிட்டன், கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் பங்குபெற்ற அனைவர்க்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.