உரிமைகள் பறிக்கப்படும் போது ஒன்றிணைந்து போராடுவோம்!

– ஹரிஹரசுதன்
தேசிய துணை ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்

76 வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்லூரிகள், பள்ளிகள், பொது இடங்கள் என தேசியக் கொடி ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த நாளுக்கு ஒவ்வொரு தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய துணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தனது வாழ்த்து செய்தியில்: அனைவருக்கும் எனது 76 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 1947 ம் ஆண்டில் தாய்திரு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம்.

இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இந்தியாவை வளாச்சியின் உச்சிக்கு எடுத்துச் சென்றனர்.

இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணி காக்க உயிர் கொடுத்த காந்தியடிகள், இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை.

இன்று நமது நாடு பலவேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இந்தியாவின் தனித்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. சரிந்து வரும் நமது நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு நம் அனைவரது பங்களிப்பு இன்றியமையாதது.

நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பேணி காக்க வேண்டியது குடிமக்களாகிய நமது அனைவரின் கடமை. நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது ஒன்றிணைந்து நாம் போராட வேண்டிய தருணம் இது. ஜாதி, மத வேற்றுமைகள் இன்றி ஒன்றாகக் கூடி இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒரு வலலரசாக மாற்ற சபதம் ஏற்போம் என தெரிவித்துள்ளார்.