76 வது சுதந்திரதின விழாவை கொண்டாடிய இந்துஸ்தான் கல்லூரி

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 76 வது சுதந்திர தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி 76 வது சுதந்திர தின விழாவின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், நமது இந்திய திருநாடு இன்று 76 வது சுதந்திர தினத்தை பெருமிதத்தோடு கொண்டாடி வருகிறது. இந்நாள் நம் தாய்த்திரு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற தியாகிகள் தன் இன்னுயிரை தியாகம் செய்தும், இளம் தியாகிகளும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்ததால் தான் நாம் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றோம். ஆகவே தற்போதுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் நம் தேசத்தின் மீது பற்றுகொள்வோம். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் கூறியது போல் நம் நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவோம் என்று மாணவர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் நாட்டுப்பற்று குறித்த நடனம், பாடல், ஊமை நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மேலும் இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்சுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், அனைத்துதுறைத் தலைவர்கள், பேராசிரிய பேராசிரியைகள், மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.