ஆர்.வி.எஸ் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் துவக்கவிழா

கோவை ஆர்.வி.எஸ் மேலாண்மையியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் துவக்கவிழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

துறை இயக்குனர் பிரபா தலைமையில், சிறப்பு விருந்தினர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மோரிஸ் சாந்த குரூஸ் (தேசிய விருதாளர், ஓய்வு பெற்ற துணை தலைமையாசிரியர், பேரிடர் மேலாண்மை குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) கலந்து கொண்டு ரெட் கிராஸ் சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.

விழாவின் செயல்பாடுகளாக மரக்கன்றுகள் நடுவது மற்றும் புகையிலை மறுப்பு ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிருந்தா நடராஜன், துறை பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.