கங்கா மருத்துவமனையில் சுதந்திர தினவிழா

கோவை கங்கா மருத்துவமனை வளாகத்தில் 76 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கே.பி.ஆர்.குழுமத்தின் நிறுவனர் கே.பி. ராமசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கங்கா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சண்முகநாதன் தலைமை பொறுப்பேற்று கொடியேற்ற நிகழ்வினை வழிநடத்தினர்.