‘மகிழ்வித்து மகிழ்’ சார்பில் பார்வையற்றோர்க்கு நலத்திட்ட உதவி

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம், கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் ஃபைரா ஆகியோர் சார்பாக பார்வையற்றவர்களுக்காக தொழில் வளர்ச்சிக்கு உதவி மற்றும் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-C, நேரு நகர் அரிமா சங்கம், கலாம் அறக்கட்டளை மற்றும் ஃபைரா அமைப்பினர் ஆகியோர் இணைந்து தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கண் பார்வையற்றோர்களுக்கு சுயதொழில் உதவி மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தேசிய பார்வையற்றோர் வளாகத்தில் நடைபெற்றது.

பன்னாட்டு அரிமா சங்கம் 324 C ன் மக்கள் தொடர்பு மாவட்ட தலைவர் அரிமா செந்தில் குமார் தலைமையில் மகிழ்வித்து மகிழ் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நேருநகர் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் மோகன்ராஜ், சோபன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன், கோவை மாநகர காவல் துறை ஆயுதப்படை பிரிவு உதவி ஆணையாளர் சேகர், அரிமா சங்கம் 324 சி மாவட்ட ஆளுநர் ராம்குமார், ஃபைரா அமைப்பின் தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தனர்.