ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை (ஆகஸ்ட் 1 முதல் 7 வரை) முன்னிட்டு கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் ‘நம்ம கோவை தாய்ப்பாலை ஆதரிக்கிறது’ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வ.ஊ.சி.பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் இணைந்து, புதிதாக தாய்மை அடைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மத்தியில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் அதனால் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.