ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்புவிழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்புரை வழங்கி, பட்டம் பெற்ற மாணவிகளை பாராட்டினார். மேலும், இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பெங்களூரில் உள்ள யூசர் எக்ஸ்பீரியன்ஸ் அன்ட் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயராணி குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் பேசும்போது, “நாம் நிறைய சவால்களைக் கடந்து வந்திருக்கும் சமீபகால மாற்றங்களுக்கிடையில் நமக்கான வாய்ப்புகளும் மிக அதிகமாகியிருக்கிறது”என்றார்.

மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய ஜெயராணி குமார், ” பழமையின் பெருமையும் புதுமை வாய்ப்புகளும் இணைந்து உருவான கல்வித்தலைமுறையைச் சேர்ந்த நீங்கள், உங்களுடைய சுயஅடையாளம், கற்றல் மற்றும் உங்கள் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்திலும் இந்த இரு அனுபவங்களையும் இணைந்து பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறி மாணவிகளை பாராட்டினார்.

மேலும், 5 தங்கப்பதக்கம் உட்பட 24 மாணவியர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றனர். இந்த விழாவில் இளநிலை, முதுநிலை மாணவியர் 642 பேர் பட்டம் பெற்றனர்.