சிங்காநல்லூர் பகுதியில்
ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா மையம் துவக்கம்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள நந்தா நகரில் 32 கண்கானிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கினைந்த மையத்தின் துவக்கவிழா கே.பி.ஆர். லே-அவுட் வாணியர் முன்னேற்ற சங்க அரங்கில் நடைபெற்றது.

இதை கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை துவக்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இங்கு அமைக்கப்பட்டுள கேமிராக்களை ஜீனீஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி இலவசமாக வழங்கியது மகிழ்ச்சி அளிக்கின்றது.

தொழில்நுட்பத்தை நாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். காவல் துறை எவ்வளவு அலர்ட்டாக இருந்தாலும். மனித தவறு என்பது சில சமயம் பாதுகாப்பு இடைவெளியை உருவாக்கிவிடும்.

தற்போது பெரும்பாலான குற்றங்கள் இணைய குற்றங்களாக நடைபெறுகின்றது. எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு கணினி மூலம் உங்கள் பணம் மற்றும் கணினி, மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்படுகின்றன. உங்களது படங்களை எடுத்து மார்பிங் செய்து உங்கள் உறவினர்களுக்கு அனுப்பி உங்களிடம் பணம் பறிப்பது, லோன் தருகின்றோம் என்று செல்லி குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடுவது போன்ற குற்றங்கள் நடக்கின்றன.

லோன் ஆஃப் லின்க் வந்தால் உடனடியாக அழித்து விடவும். எனவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜீனீஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் கணினி மற்றும் வீடுகளில் குற்றச்செயல்கள் மிகவும் அதிகம் ஆகிவிட்டது. சிறிய கவனக்குறைவும் கூட குற்றவாளிகள் வீட்டிற்குள் கைவரிசை காட்ட வசதியாக போய்விடும். இதற்கு தீர்வாக சிசிடிவி கேமராக்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

சிசிடிவி கேமராக்கள் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றிலும் பாதுகாப்பான கண்காணிப்பில் வைத்திருக்க உதவியாக இருக்கும். இந்த கேமராக்கள் நிகழ்நேர வீடியோவைக் காண்பிக்கும். அடர்ந்த இருளிலும் தெளிவான காட்சியை வழங்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட சிசிடிவி கேமராக்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.

இந்த கேமராக்கள் அனைத்து திசைகளிலும் சுழலும் லென்ஸ்கள் உடன் 360 டிகிரியில் கவரேஜ் செய்து கொடுக்கிறது. இந்த கேமராக்களில் ஹெவி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.