ஸ்ரீ நாட்டிய நிகேதன் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற பரதநாட்டிய குரு மிருதுளா ராயின் மாணவி அதிதியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி சர்தார் வல்லபாய் படேல் அரங்கில் நடைபெற்றது.

7 வயதில் இந்தக் கலையைக் கற்கத் தொடங்கிய மாணவி அதிதி, 9 வயதில் குரு மிருதுளா ராயிடம் கற்கத் தொடங்கினார்.

இந்நிலையில் தனது அரங்கேற்ற நிகழ்வில், அலரிப்பு, ஜதீஸ்வரம், பஜன், வர்ணம், நிந்தஸ்துதி, பஜன் மற்றும் தில்லானா ஆகிய பாடல்களுக்கு அவர் அருமையாகப் ஆடினார்.

மக்கள் குரல் பத்திரிகையாளர் ராம்ஜீ மற்றும் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை 150 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கண்டு ரசித்தனர்.