ஜூன் 27-இல் தமிழக அமைச்சரவை கூட்டம்

ஜூன் 27ம் தேதி சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும், சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வது, நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் அறிவுறுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது குறித்தும் தெரிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.