உலகின் மிக வயதான மனிதருக்கு நாளை 113 வது பிறந்தநாள்!

உலகின் மிகவும் வயதான மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்ற வெனிசுலா நாட்டை சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 113 ஆவது பிறந்தநாளை வெள்ளிக்கிமை (மே 27) கொண்டாட உள்ளார்.

பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக 1909 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி இவர் பிறந்தார்.

11 குழந்தைக்கு தந்தையான இவருக்கு, 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

(Image: Reuters)

பெரெஸ் மோராவிற்கு வயதின் முதிர்வு காரணமாக சற்றே உயர்ந்த இரத்த அழுத்தம் மற்றும் செவிப்புலன் திறன் ஓரளவு குறைந்துள்ளதே தவிர, அவர் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும், பிற மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை எனவும் அவரது மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

(Image: Reuters)

தற்போது சக்கர நாற்காலியில் வலம் வந்துக் கொண்டிருக்கும் இவர், ஒவ்வொரு நாளும் ஒரு கப் மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்.