தமிழக்தில் 1 முதல் 10ம் வகுப்புக்கு ஜூன் 13 பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 2022-2023 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் புதன்கிழமை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 1-10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்கப்படும். 12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

10ம் வகுப்புக்கு 2023 ஏப்ரல் 3ம் தேதியும், 11ம் வகுப்புக்கு 2023 மார்ச் 14ம் தேதியும், 2ம் வகுப்புக்கு 2023 மார்ச் 13ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

அடுத்து வரும் கல்வியாண்டு 210 வேலைநாட்கள் கொண்டதாக இருக்கும் எனக் கூறிய அவர், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றார்.

மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி குறித்து அவர் கூறுகையில், நீட்க்கு தனியே பயிற்சி வழங்கப்படாது என்றும், பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.