பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவும் அமுதம் திட்டம் அறிமுகம்

கோவை தெற்கு சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான இலவச பசும் பால் தரும் அமுதம் திட்டத்தின் துவக்கவிழா ஜி.டி. அரங்கத்தில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். பால் அங்காடிகளில் பதிவு செய்து, அமுதம் அட்டையை பெற்ற பின்னர், அதை கோவை தெற்கு சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட மளிகை கடைகளில் கொடுத்து தினமும் பாலூட்டும் தாய்மார்கள் பாலை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன் ஆளுநர் ராஜசேகர் கலந்து கொண்டார்.

மேலும், கோவை தெற்கு சட்டமன்ற பகுதி பெண்களுக்கான இலவச சானிடரி நாப்கின் வழங்கும் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இவையனைத்தும் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரியுடன் இணைந்து செய்யப்பட்டது.