வேளாண் பல்கலையில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

அடுமனைத் தொழில்நுட்பம் பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறகிறது.

அடுமனை உணவுப் பொருட்களுக்கு (Bakery Products) தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும்.

வளர்ந்து வரும் இவ்வடுமனைத் தொழில்நுட்பங்கள் சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ், கட்லெட் மற்றும் சமோசா எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படுகிறது.

இத்தொழில்நுட்பத்தில் கலந்து கொள்ள விரும்புபவர் ரூ.1,500 + 18% GST செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

 

Source: Press Release