கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் – வைரலாகும் யுவனின் பதிவு

சட்ட மேதை அம்பேத்கர் உடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா ‘மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார், அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒருபுறம் எதிர்ப்பு கிளப்பி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும் சில தரப்பினர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இளையராஜாவை அவமதிப்பதை கண்டித்திருந்தார். இருந்தபோதிலும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளன.

கலை துறை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இளையராஜாவுக்கு தரப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

திராவிட கொள்கைகளுக்கு எதிராக சிந்தனைகளை கொண்ட பாஜகவின் முக்கிய தலைவரான மோடியை இளையராஜா ஆதரித்துள்ள நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜா திராவிட கொள்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இளையராஜா எழுதிய கட்டுரை வலதுசாரி சிந்தனையுடன் அமைந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு ஆடை அணிந்து, Dark Dravidian, Proud Tamizhan என்ற அடைமொழியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த பதிவு அதிக விருப்பங்களையும் பகிர்வுகளையும் பெற்று வருவதுடன், தனது நிலைப்பாட்டை அழுத்தமாக அவர் முன்வைத்துள்ளார்.