கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கேஸ் விலை உயர்வுவை கண்டித்து கோவையில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு விலை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டர்க்கு பாடை கட்டி கண்டன் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கேஸ் விலையை உயர்த்தக்கூடாது, பெட்ரோல் விலை விலையை உயர்த்தக்கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.