ஒலி மாசுபாடு: டாப் 5 பட்டியலில் இருக்கும் இந்திய நகரங்கள்?

உலக அளவில் ஒலி மாசுபாடு மிகுந்த நகரங்களின் பட்டியலை ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் உலகின் சத்தம் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் 5 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஐ.நா. சபை வெளியிட்டுள்ள பட்டியலில் உலகிலேயே அதிக ஒலி மாசுமிக்க முதல் ஐந்து நகரங்களை காண்போம்: வங்களாதேசத்தின் தலைநகர் டாக்கா நகரம் 119 டெசிபல் ஒலி மாசுடன் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் 114 டெசிபல் ஒலி மாசுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் 105 டெசிபல் ஒலி மாசுடன் மூன்றாம் இடத்திலும், வங்களாதேசத்தின் ராஜ்ஷாஹி மற்றும் வியட்நாமின் ஹோ சி மின் நகரம் 103 டெசிபல் ஒலி மாசுடன் நான்காம் இடத்திலும், நைஜீரியாவின் இபாடன் 101 டெசிபல் ஒலி மாசுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் அசன்சோல் (89 டெசிபல்), கொல்கத்தா (89 டெசிபல்), ஜெய்ப்பூர் (84 டெசிபல்), டெல்லி (83 டெசிபல்) ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

டெசிபெல் என்ற அளவீடு ஒலியின் அளவை கணக்கிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் 70 டெசிபலை தாண்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 70 டெசிபலுக்கு மேல் இரைச்சல் இருந்தால் அது உடல்நலத்துக்குத் தீங்காகவும், ஒலி மாசாகவும் கருதப்படுகிறது.

 

Credits: Puthiya Thalaimurai