ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொங்கு மண்டலத்தின் சிறந்த மருத்துவமனை விருது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கொங்கு மண்டலத்தின் “சிறந்த மருத்துவமனை” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஹையாட் ரீஜென்சியில் நியூஸ்18-தமிழ்நாடு ஏற்பாடு செய்திருந்த “மருத்துவ விருதுகள் 2022” என்னும் பிரத்யேக சுகாதார விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறந்த மருத்துவமனை விருதை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வழங்க, எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.