70 வது வார்டு திமுக வேட்பாளர் சர்மிளா சுரேஷ் நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை மாநகராட்சி 70 வது வார்டில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சர்மிளா சுரேஷ் நாராயணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் .

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சியின் 70 வது வார்டில் தி.மு.க.சார்பாக சர்மிளா சுரேஷ் நாராயணன் போட்டியிடுகிறார்.

இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வளர்ச்சிகளும் இல்லாத நிலையில் தாம் வெற்றி பெற்றால் சாலை சீரமைத்தல்,பொது சுகாதாரம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என உறுதியாக கூறினார்.

கடந்த எட்டு மாத தி.மு.க.அரசின் மக்கள் நல திட்டங்களை வார்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதி பட கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.