வீட்டுவசதி துறை அமைச்சருக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் நன்றி

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் DTCP/CMDA மனை பிரிவுகளை பதிவு செய்வதை மிகவும் எளிமைப்படுத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் ஹென்றி, தலைமையில் FAIRA பொறுப்பாளர்கள் தேசிய துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய செயலாளர் கிங்மேக்கர் ராஜசேகர், மாநில துணைத் தலைவர் உதயகுமார், மாநில துணைச்செயலாளர் முத்து, தலைமை நிலையச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் அமைச்சரை நேரில் சந்தித்தனர்.

மனை வரன்முறை சட்டத்தின் கீழ் டிடிசிபி/சிஎம்டிஏ அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை பிரிவுகளை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து உத்தரவு பெறும் நடைமுறைகளை (ESCROW தனி வங்கி கணக்கு, திட்ட மதிப்பீடு குறித்த உறுதிமொழி ஆவணம், விற்ற மனைகளுக்கான தண்டத் தொகை, புவியியல் அட்சரேகை தீர்க்கரேகை வரைபடம், கணக்குகளைப் பராமரித்தல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இன்றி) நடைமுறை சிக்கலின்றி, காலம் நேரம் தாமதம் வீண் விரையம் இன்றி விரைவாகவும் மிகவும் எளிமையாகவும் பதிவு செய்து உத்தரவு பெறும் வகையில் வழிவகை செய்து, உத்தரவு பிறப்பித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

மேலும் வழக்கமான மனைப்பிரிவு அங்கீகாரத்திற்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வதற்கு மேலும் எளிமைப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தனர்.