தேசிய இளைஞர் தின விழா

கோவை: சுவாமி விவேகானந்தரின் 159 வது பிறந்த நாள் நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை ம.ந.க. வீதியில் இந்து இளைஞர் முன்னணி மாணவர் அமைப்பு சார்பாக தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட துணைதலைவர் சோமு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர் செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். கோவை கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் நகர் கிளை பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.