பிரான்சில் கொரோனாவின் புதிய உருமாற்றம் கண்டுபிடிப்பு

பிரான்சில் கொரோனாவின் புதிய உருமாற்றம் பெற்ற திரிபினை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாற்றம் பெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரான்சில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதோடு, அந்த வைரஸிற்க்கு பி.1.640.2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்சின் மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா ஒமைக்ரானை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானாவை விட 46-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மற்ற நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.