கோவையில் 671 இடங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம்

கோவையில் 671 கல்வி நிலையங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
.
கோவையில் இந்த முகாமை துவக்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

கோவையில் 671 கல்வி நிறுவனங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இன்று 83 பள்ளிகளில் 16 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.

கோவையில் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவர் குணமடைந்துள்ளார். அவர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கோவையில் டெங்கு பரவல் உள்ளது. டெங்கு பாதித்தவர்கள் அதிகம் இருந்தால் அந்த பகுதி ஹாட்ஸ்பாட்டாக கருதி சுகாதார பணிகள் மேற்கொள்ளபபட்டு வருகிறது. மொத்தம் 37 இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியரக்ள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். மாநகராட்சியில் 900 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறார்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் விடுமுறை அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

.