கே.ஐ.டி கல்லூரியில் ஆராய்ச்சிக்கூடம் திறப்பு

கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக், கல்லூரியின் இயந்திரவியல் துறையின் சார்பில் ஆராய்ச்சிக்கூட திறப்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக், கல்லூரியின் இயந்திரவியல் துறையின் சார்பில் அடிட்டிவ் மேனுஃபேக்ச்சரிங் ஆராய்ச்சிக்கூடம் (ADDITIVE MANUFACTURING RESEARCH LABORATORY) தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கே.ஐ.டி கல்லூரி மற்றும் மேட்ஸ்ப்பீ இன்னோவேஷன் சென்டர் ஆகியோர் (MEDSBY INNOVATION CENTER) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், ஆகியோர் முன்னிலைவகிக்க சிறப்பு விருந்தினர்களாக சி.ஐ.டி கல்லூரியின் 3டி பிரிண்டிங் ஆராய்ச்சிகூட பொறுப்பாளர் ராஜேஷ் ரங்கநாதன், மேட்ஸ்ப்பீ ஹெல்த்கேர்&இன்ஜினீயர் சொல்யூஷனின் நிறுவனர் குருபிரஷாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் 3டி-பிரிண்டிங், ரபீட் ப்ரோடோடைப்பிங் (Rapid prototyping), டைரக்ட் டிஜிட்டல் மேனுஃபேக்ச்சரிங் (Direct digital manufacturing) போன்ற தொழில்நுட்ப முறைகளின் மூலம் பொருள்களின் மாதிரி வடிவமைப்புகள், பலவிதமான வடிவங்களில் பொருள்களை துல்லியமாக உற்பத்தி செய்யும் முறைகளை பற்றி மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், ஆராய்ச்சிகள் செய்வதற்கான வசதியுடனும் இந்த ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவமாணவிகள் பங்கேற்றனர்.