மங்கலம் அமிர்தா பள்ளியில் உயர்கல்வி, தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி

மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வரவேற்புரையை பள்ளி முதல்வர் வித்யாசாகர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமிர்த வித்யாலயம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் தொழில் ஆலோசனைத் திட்டம் குறித்து அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் கோவை அமிர்த இணை பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் IQAC துணைத் தலைவரான பிரசாத் நாயர் மாணவர்களுக்கு தொழில் ஆலோசனைத் திட்டம் விழிப்புணர்வை ஊட்டினார்.

அமிர்த வித்யாலயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போட்டித் தேர்வு ஒருங்கிணைப்பாளரான செல்வகுமார் மாணவர்களுக்கு போட்டித் தேர்வினை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.