கே.ஜி திரையரங்கின் 40ம் ஆண்டு துவக்கவிழா

கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள கே.ஜி திரையரங்கின் புதிய நவீன வசதிகளுடன் புது பொழிவுடன் திறந்து பொதுமக்களுக்காக தயாராக உள்ளது, திரையரங்க உரிமையாளர் பேட்டி.

கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள கே.ஜி திரையரங்கின் 40ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் வாயிலாக திரையரங்கின் துணை இயக்குநர் துரை ராஜ் பேசுகையில், கே.ஜி சினிமாஸ் 40வது வருட தீபாவளியை தாண்டி பயணிக்கின்றது. 1981ம் ஆண்டு தீபாவளியன்று துவங்கப்பட்ட இந்த திரையரங்கத்தின், 40 வருடம் நிறைவு பெற்றதை விழாவாக தற்போது கொண்டாடி வருகின்றோம், ஆரம்ப காலத்தில் 3000 இருக்கைகளுடன், 66 அடி உயரம் கொண்டு, ஸக்ரின் என்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கு என்ற பெயரை எடுத்த இந்த திரையரங்கில் ஆறு மொழிகளில், இதுவரை 6000 திரைப்படங்கள் திரையிடப்பட்டு உள்ளது எனவும், 6 கோடி மக்கள் பார்வையாளர்களாக வந்துள்ளதாகவும், கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், இந்த தீபாவளிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி காந்தின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்காக வர உள்ளது. எனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாக்ஸ் ஆபிஸ், திரையரங்கின் வரவேற்பு பகுதியில் தானாக டிக்கெட்களை பெற்று கொள்ளும் தொழிற் நுட்பம், திரையரங்கின் உட்புறங்களில் ஆண், பெண் இருபாலரின் ஒப்பனை அறைகள் என அனைத்தும் புதுப்பொலிவுடன் நேர்த்தியாக தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போதய சூழலில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி தற்பொழுது திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது எனவும், தற்பொழுது பார்வையாளர்கள் திரையரங்கு இருக்கைகளில் இருந்தபடியே, வேண்டிய உணவு பொருள்களை கைபேசி மூலம் இருக்கைகளின் வரிசை எண்ணினை தெரிவித்து ஆர்டர் செய்து தங்களது இருக்கையிலேயே பெற்றுக்கொள்ளும் முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறினார். 180 டிகிரி அளவில் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதிகளுடன் கூடிய இருக்கைகள் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதியாக கைப்பேசியிலே படம் பார்த்தாலும்  திரையரங்கின் அனுபவத்தை இதுவரை எந்த அலைபேசியும் தந்து விட முடியாது என்பதற்கு சான்றாக ஜொலிக்கின்றது இந்த திரையரங்குகள்.