13ம் ஆண்டு கண்ணதாசன் விழா

கோவை: ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கண்ணதாசன் கழகம் இணைந்து நடத்திய 13ம் ஆண்டு கண்ணதாசன் விழா ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் எழுத்தாளர் போகன் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோருக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டனர்.