இலவச சட்ட உதவிகள் முகாம்

கோவை மாவட்ட ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் இலவச சட்ட உதவிகள் முகாம் நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தீர்வுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9,00,000க்கான காசோலையினை வழங்குகிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிரிஸ்டோபர், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் ஏ.நஜீர் அகமது,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி.