டாக்டர். ஆர்.வி கல்லூரியில் உலக முதியோர் தினம் கடைபிடிப்பு

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய வட்டத்தின் சார்பாக இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் துறைத்தலைவர் ஜெயந்தி வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் முதியோர்கள் நமக்கு வழிகாட்டிகள், இளைஞர் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் போன்றவர்கள் முதியவர்கள், அவர்களை பாதுகாப்பது நமது கடமை போன்ற விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேச்சுப் போட்டியும் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.
இதில் 14 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் மூன்றாம் ஆண்டு தொழில்சார் வணிகவியல் துறை மாணவன் . பிரவீன், மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி ஸ்ரீ அபிராமி முதல் பரிசாக ரூபாய் 500 மற்றும் புத்தகமும் பரிசாக பெற்றனர்.