தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சாக்லேட் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் அடுமனைப் பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். பயிற்சியின் போது ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் போன்றவை செய்ய கற்றுத் தரப்படுகின்றன.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500/- 0+ஜி.எஸ்.டி முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு: 0422-6611268/ 6611340