இந்துஸ்தான் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (Institute of Cost Accounts of India) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் அதைசார்ந்த துறைகளில் பயின்று வரும் மாணவர்கள் மூன்று ஆண்டு கல்லூரி படிப்பை படிப்பது போல் கூடுதலாக இந்த ICMAI பாடப் பிரிவையும் படிக்கலாம். எனவே மாணவர்களுக்கு டிகிரி மற்றும் ICMAI பாடப்பிரிவிற்கான சான்றிதழும் கிடைக்கும்.

கோவை மாவட்ட ICMAI தலைவர் மதனகோபால், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் செயலர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.