விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூம்புகாரில் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூம்புகார் விற்பனை மையத்தில் விநாயகர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று கண்காட்சி நடைபெறுகிறது. இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும். இது சம்பந்தமாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாளர் ரொனல்டு செல்வஸ்டின் கூறும்போது, கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர்களை பித்தளை, பஞ்சலோகம், சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோகம், காகிதக்கூழ், களிமண், மார்பில் போன்ற வேலைப்பாடுகள் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார்.